நாட்டுக்காக ராகுல் காந்தி உயிரையும் தியாகம் செய்வார் - ப்ரியங்கா காந்தி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். இதனிடையே பிரதமர் மோடி நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் கலந்து கொண்டேகொண்டு பேசும்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தன்னை பற்றி இதுவரை 91 முறை அவதூறாக பேசியதாக கூறினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி தன்னைப் பற்றி 91 முறை அவதராக பேசியதாக கூறினார். அந்த அவதூறு புகார்கள் ஒரே பக்கத்தில் அடங்கிவிடும். ஆனால் காங்கிரஸ் கட்சியினை குறித்து கூறப்பட்ட அவதூறுகளை பட்டியலிட்டால் புத்தகங்களாக தயாரித்து அவற்றை பதிப்பிடலாம்.

மேலும் மோடி பொது மக்களின் பிரச்சினைகளை குறித்து பேசாமல் தனது தனிப்பட்ட பிரச்சினைகளை மட்டுமே பேசி வருகிறார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டுக்காக குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாட்டிற்காக கடுமையாக உழைத்தனர்.

 ஆனால் பிரதமர் மோடி மட்டுமே மக்கள் முன்பு தன்னை மட்டுமே கூறி அழுது வருகிறார். எனது சகோதர ராகுல் காந்தி துப்பாக்கியால் சுட்டாலும், கத்தியால் குத்தினாலும் சத்தியத்தின் வழியிலேயே செல்வார். நாட்டுக்காக துப்பாக்கி குண்டு வாங்கி உயிரை விடவும் தயாராக உள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Ghandhi speech about PM Modi and Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->