கர்நாடகாவில் வெடித்தது போராட்டம்!....சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், மைசூருவில் கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின்  போது மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய அவுட்டில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதலமைச்சர்  சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில்  மனு மீதான தீர்ப்பு நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  வழங்கப்பட்டுள்ளது. அதில், சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம்,  தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, என் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும், இந்த விவகாரத்தில் நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி அவரது இல்லத்தின் முன்பு பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்தினர்.
மேலும் பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protest broke out in Karnataka BJP protest demanding Siddaramaiah's resignation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->