வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் போராட்டம்; ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் மற்றும் பயங்கரவாதிகளின் புகைப்படம் இடம்பெற்றதால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுடன் அமலுக்கு வந்துள்ளது. 

இந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்,  ஜமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என 10 பேர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன், மத்திய அரசு தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது வரும் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. அதேவேளை, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் பகுதியில் ஜமாத் இ இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பில் இன்று கண்டன போரட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வரின் புகைப்படம் இடம்பெற்றிருத்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட இஸ்லாமிய பிரதர்ஹுட் அமைப்பின் தலைவர் ஷேக் ஹசன் அல் பனாவின் புகைப்படமும் இந்த போராட்டத்தில் இடம்பெற்றுள்ளமை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், 2020 டெல்லி வன்முறையில் மூளையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உமர் காலிதின் புகைப்படமும் போராட்டத்தில் இடம்பெற்றிருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில் இது தொடர்பாக 03 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இந்த போராட்டம் தொடர்பாக இதுவரை 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest in Kerala against Waqf Amendment Act Photo of Hamas militant leader and terrorists causes stir


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->