தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
Protests across Tamil Nadu tomorrow Edappadi Palaniswami announcement
பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அதிமுக தீர்மானித்துள்ளது.
அதாவது, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை 27.12.2024 வெள்ளி கிழமை காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலை நகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது..
குறித்த கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள்,கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Protests across Tamil Nadu tomorrow Edappadi Palaniswami announcement