பாஜக.,வில் இணைகிறாரா தடகள வீராங்கனை பி.டி‌.உஷா? அதிகாரபூர்மாக வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளாவை சேர்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை பி.டி‌.உஷா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் பிடி உஷாவிற்கு நியமன எம்பி பதவி கிடைத்துள்ளதால், அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர போவதாக தகவல் பரவியது. 

இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், இந்த விமர்சனம் குறித்து பதில் அளித்த பி.டி.உஷா தெரிவித்துள்ளதாவது,

"எனக்கு விளையாட்டு பிடிக்கும். விளையாட்டில் நான் சாதித்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்காக எந்த அரசியல் கட்சியிலும் நான் சேரப் போவதில்லை. பாரதிய ஜனதா உள்பட எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். 

எனக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்து கட்சியினரையும் பிடிக்கும்.

எம்பி ஆனால் நான் டெல்லியிலேயே இருக்க மாட்டேன். நான் நடத்தி வரும் பள்ளியை விட்டு விட முடியாது. அதேசமயம் விளையாட்டிற்கும், பொது சேவையிலும் என்னால் முடிந்ததை செய்வேன்". என்று ஒலிம்பிக் தடகள வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PT Usha Press meet About BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->