இது விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம்.. பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்.. பி டி உஷா.!! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையில் மொத்தம் உள்ள எம்பிக்களில் 12 பேரை குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு நியமன எம்பிகளாக நியமிக்கலாம். அதன்படி கலை, அறிவியல், இலக்கணம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்பி பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. 

தற்போதைய நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உட்பட ஐந்து பேர் நியமன எம்பிக்களாக உள்ளனர். மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு எம்பிக்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே,  பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்பிளாக நியமித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில், மாநிலங்களவை நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பி டி உஷா, மாநிலங்களவை எம்பி பதவி மகிழ்ச்சியளிக்கிறது. இது விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம். பாராளுமன்றத்தில் விளையாட்டுக்காக குரல் எழுப்புவேன் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PT Usha says MP Post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->