ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்சனை.. நைசாக பற்றவைத்த திமுக.?! உள்ளே புகுந்த ஆளும்கட்சி.?! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

2,500 பேர் பங்கேற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிலர் போலி பாஸ்களுடன் வந்திருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

அதே சமயத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிஅவர்களை வரவேற்பதற்காக அவர்களது ஆதாரவாளர்கள் மதுரவாயில் சாலையில் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நுழைந்தவுடன், மர்ம நபர்கள் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதில் இரட்டை தலைமை வேண்டாம் என்றும், ஒற்றை தலைமையே போதும் என்றும் கோஷம் எழுப்பியுள்ளனர். 

மேலும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கூட அமைதியாகவுள்ள நிலையில், இந்த கோஷத்தை எழுப்பியவர்கள் திமுகவை சேர்ந்த குண்டர்களாக இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. ஏற்கனவே போலி அடையாள அட்டையுடன் மர்ம நபர்கள் சிலரை போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public meeting ADMK supporters against o panneerselvam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->