புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என நினைத்தேன், ஆனால்., முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என நினைத்தேன், ஆனால், நிர்வாக சிக்கலால் அது முடியவில்லை என்று, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தற்போது என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அக்கட்சியின் தலைவரான ரங்கசாமி இருந்து வருகிறார்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் போதே பாஜக கடுமையான நெருக்கடியை முதல்வர் ரெங்கசாமிக்கு கொடுத்தாக செய்திகள் வெளியாகின.

மேலும் ஆட்சியிலும் பாஜகவின் தலையீடு உள்ளதாகவும், ஆளுநர் போட்டிக்கு ஆட்சி நடத்தி வருவதாகவும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வாங்க ஏற்படும் காலதாமதத்தால், பல திட்டங்கள் முடங்கும் நிலையில் உள்ளதாக ஆதங்கப்பட்டுள்ளார்.

மேலும், தான் புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என நினைத்தேன், ஆனால், நிர்வாக சிக்கலால் அது முடியவில்லை, சில முடிவுகளை எடுக்க தடைகள் ஏற்படுவதால் வளர்ச்சி மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry CM Rangasamy Say about Puducherry Govt Now


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->