சூடு பிடிக்கும் சொத்து குவிப்பு வழக்கு.!! விஜயபாஸ்கருக்கு நெருக்கடி.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சி கலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர்.விஜயபாஸ்கருக்கு புதுப்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகள் வரை அமைச்சராக பதவி வகித்தவர் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். 

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 5ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக மாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் மீண்டும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி ரம்யாவுக்கு புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai Court orders Vijayabaskar to appear in asset hoarding case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->