எஸ்பி வேலுமணிக்கு நெருக்கடியா? அமலாக்கத்துறை திடீர் ரெய்டு! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளாக இருந்த மூவரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பந்ததாரர்களாக இருக்கும் புதுக்கோட்டை சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், கறம்பக்குடி தாலுகா கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், மற்றும் ஆலங்குடியைச் சேர்ந்த பழனிவேல் ஆகிய மூவர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

துப்பாக்கியுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இம்மூவரின் வீடுகளில் இன்று காலை தொடங்கி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

இதில், முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவை விட்டு விலகி பாஜகவில் இணைந்து மாவட்டப் பொருளாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இக்கற்கள் மூவரும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்படும் நிலையில், கடந்த 2022 ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர்களது வீட்டில் சோதனை நடத்தி, முருகானந்தம் மற்றும் பழனிவேல் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக லஞ்ச ஒழிப்புத்துறை, ஐடி, அமலாக்கத்துறை சோதனை என்றாலே, ஆளும் கட்சி, எதிர்கட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கும் யுக்தி தான் என்று, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட காட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்த சோதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கடி கொடுக்க இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai ED Raid ADMK SP Velumani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->