த. வெ. க. தொண்டர்களுக்கு பணம் முக்கியமில்லை.. தளபதி தான் முக்கியம் : புஸ்ஸி ஆனந்த் பேச்சு! - Seithipunal
Seithipunal



கடந்த பிப்ரவரி 2ம் தேதி நடிகர் விஜய் "தமிழ்நாடு வெற்றிக் கழகம்" ( த.வெ,க ) என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். இந்த கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் உள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கரூர் வெண்ணைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவர் வி. பி. மதியழகன் தலைமை தாங்கினார். மேலும்  கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

அதில் அவர் பேசியதாவது, "த. வெ. க தொண்டர்களிடம் பணம் முக்கியமா? தளபதி முக்கியமா? என்று கேட்டால் தளபதி தான் முக்கியம் என்று சொல்பவர்கள் தான் நமது கட்சியில் இருக்கிறார்கள். விரைவில் தளபதி கரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் வருகை தர உள்ளார். 

2026 சட்டமன்றத் தேர்தலில் தளபதியை நாம் ஆட்சியில் அமர வைக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில், இப்போதிருந்தே நாம் தளபதியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்" என்று கூறினார். முன்னதாக புஸ்ஸி ஆனந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததோடு அங்கு வந்த அனைவருக்கும் உணவு பரிமாறினார். புஸ்ஸி ஆனந்தின் இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pussy Anand Speech About TVK Volunteers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->