வேலூரில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கிய முக்கிய கட்சி! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து விதமான தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த தீவிரம் காட்டி வருகிறது.

அதற்கான சாத்தியக்கூறுகள், கொள்கை முடிவுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதற்கிடையே வரும் செப்டம்பர் 17ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்டி ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்களூ தாக்கல் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

அதேபோன்று இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. 

அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஏ.சி சண்முகத்தின் புதிய நீதி கட்சி தங்களின் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. வேலூரில் நேற்று புதிய நீதி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பிரபல தனியார் ஹோட்டலில் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டதோடு புதிய நிர்வாகிகளுக்கான நியமன ஆணையை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் வழங்கினார். வேலூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து பல முறை போட்டியிட்டு தோற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthiya neethi katchi started election work in Vellore constituency


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->