வீண் பழி., வேதனையில் பெண் மருத்துவர் தற்கொலை., சிக்கிய கடிதத்தால் விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தவுசா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு டாக்டர் அர்ச்சனா சர்மா பிரசவம் பார்த்தார்.

அந்த பெண்ணிற்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் சிசிச்சை பலன் இன்றி உயிர் இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். கர்ப்பிணி பெண் சாவுக்கு தவறான சிகிச்சையே காரணம் என டாக்டரின் மீது அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். 

இதனிடையே அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள். மேலும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் புகார் செலுத்தினார்கள். இதையடுத்து போலீசார் டாக்டர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். 

இதனால் மனவேதனை அடைந்த டாக்டர் அர்ச்சனா சர்மா மருத்துவமனையில் மேல் மாடியில் இருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு டாக்டர் அர்ச்சனா சர்மா உருக்கமான கடிதம் எழுதி வைத்து இருந்தார். 

அவரின் அந்த கடிதத்தில், "நான் எந்த தவறும் செய்யவில்லை, என் மரணம் தான் அதற்கு சாட்சி. அப்பாவி மருத்துவர்களை என்னைப்போல் துன்புறுத்த வேண்டாம். நான் எனது கணவரை, எனது குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்குப் பிறகாவது என் குடும்பத்தை துன்புறுத்தாமல் இருங்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த கடிதத்தில் டாக்டர் அர்ச்சனா சர்மா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் அவசர உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெண் மருத்துவர் உயிரிழக்கக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து காவல்துறை தரப்பில் நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan Lady Dr Suicide Case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->