ராஜ்யசபா || நாடுமுழுவதும் 57 எம்.பி.,க்கள், தமிழகத்தில் 6 எம்.பி.,க்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடுமுழுவதும் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி முடிவடையவுள்ள நிலையில், இந்த ஆறு இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பதவிக் காலம் முடியும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் விவரம் :

ஆர்.எஸ்.பாரதி, 
டிகேஎஸ் இளங்கோவன், 
ராஜேஷ்குமார், 
நவநீதிகிருஷ்ணன், 
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், 
ஏ.விஜயகுமார்
ஆகிய 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதேபோல், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 51 மாநிலங்களவை இடங்களுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தமாக தமிழகத்தை சேர்த்து 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajyasabha election june 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->