கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா..?! பிரபல பாடகியால் கடுப்பான ராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பிரபல பாடகியான கனிகா கபூர் தனக்கு கரோனா தொற்று இருப்பதை மறைத்து அரசியல் பிரமுகர்கள்  கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனால் அந்த விருந்தில் கலந்து கொண்ட பலரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

உண்மையை மறைத்த காரணத்திற்காக கனிகா கபூர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து நாடு முழுவதும் வெளியான தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், "கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகியான கனிகா கபூர் அளித்த விருந்து நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினரான துஷ்யந்த் சிங், அதன் பின்னர் நாடாளுமன்ற கூட்டத்திலும் குடியரசுத் தலைவர் மாளிகை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருக்கின்றார்.

இதன் காரணமாக குடியரசுத் தலைவர் முதல் வரை அனைவரும் அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் தான் கரோனா வைரஸ் எளிமையாக பரவுகின்றது.

இதனை தடுப்பதற்காக தான் அடுத்த மூன்று வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தெரிவிக்கிறது." என்று வலியுறுத்தி இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramadoss angry about kanika kapoor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->