உயிரே போயிருக்கும்!...தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள அத்திபட்டியில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர்  திருமங்கலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆர்.பி.உதயகுமாருடன் அவரின்  ஆதரவாளர்கள் சிலரும் காரில் சென்றனர்.

தொடர்ந்து, மங்கல்ரேவு பகுதியில் ஆர்.பி உதயகுமார் ஆதரவாளர்களின் கார்களை அமமுக நிர்வாகிகள் திடீரென மறித்து, டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.பி.உதயகுமாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும், அமமுக நிர்வாகிகள் ஆர்.பி.உதயகுமாருடன் வந்த அவரது ஆதரவாளர்களின் கார்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.  இந்த தாக்குதல் சம்பவத்தில்  உசிலம்பட்டியை சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தினேஷ்குமார், விஷ்ணு, அபினேஷ் உள்ளிட்ட சிலர்  காயம் அடைந்தனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்திய அ.ம.மு.க.வினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும் என்றும், இ.பி.எஸ்.சின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியால் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்த அவர், பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு இல்லை என்று  கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rb udhayakumar has filed a sensational complaint demanding action against the attackers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->