#சென்னை || தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை சுற்றிவளைத்த தனிப்படை போலீஸ்.!
Rowdy pinu again arrest chennai
கேரள மாநிலத்தை சேர்ந்த ரவுடி பினு, கடந்த 1997-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் குடியேறினார். சென்னையிலும் தொடர்ந்து தனது ரவுடிசத்தை நடத்திவந்த நிலையில், தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்வதும், பின்னர் ஜாமினில் வெளிவருவதுமாக இருந்து வருகிறார்.
இந்த ரவுடியுடன் சேர்ந்து ராதாகிருஷ்ணன், விக்கி, நாகராஜ் என பல ரவுடிகள் கூட்டு சேர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில் ரவுடி பினுவின் கூட்டாளிகளே அவனுக்கு எதிரிகளாகவே, அவனின் உயிருக்கு ஆபத்து உண்டானது.
இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் பினு தலைமறைவாகிய ரவுடி பினு, 2018 ஆண்டு, பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினான்.
இதனையறிந்த போலீசார் மொத்த ரவுடி கூட்டத்தையும் சுற்றிவளைத்து கைது செய்தது. இதில் ரவுடி பினு மட்டும் தப்பித்தான். பின்னர் போலீசார் அவனையும் கைது செய்து புழல் சிறையில் அடைக்கவும், ஜாமினில் விடுதலை ஆவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடி பினு-வை போலீசார் அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி பினு-வை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில், ரவுடியை பினு-வை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Rowdy pinu again arrest chennai