அடேங்கப்பா தகவல்!!!தூர்வாரும் பணிகளுக்கு ரூ.120 கோடிகளா!!!- அமைச்சர் துரைமுருகன்
Rs 120 crores for the deep cleaning works in rivers Minister Duraimurugan information
தமிழக சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் இத்துறையின் கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,"காவிரி டெல்டா பகுதிகளான சேலம்,ஈரோடு, நாமக்கல்,ஈரோடு, திருச்சி,புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்கள், அதேபோல், திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி,விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி,சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேபோல், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கான கலவையான விமர்சனங்கள் தற்போது அரசியல்வாதிகளிடையே பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Rs 120 crores for the deep cleaning works in rivers Minister Duraimurugan information