கோரிக்கை நிறைவேற்றுவதில் பின் தங்க மாட்டென்!!! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை செய்த எடப்பாடி பழனிச்சாமி....!
Edappadi Palaniswami did what Chief Minister Stalin said
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் நேற்று பேசியபோது, 'என்னுடைய அன்பான வேண்டுகோள்' என இருமொழிக்கொள்கையைப் பற்றி பேசினார் .

அதில் அவர், "ஏனென்றால், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்.எதிர்க்கட்சி தலைவர் டெல்லிக்கு சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.
டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப்போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இரு மொழிக்கொள்கைஅவர் அங்கே வலியுறுத்த வேண்டும் "என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி:
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர் கூறியதாவது,"தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தினேன். பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பை தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியுள்ளேன் " எனத் தெரிவித்தார்.
English Summary
Edappadi Palaniswami did what Chief Minister Stalin said