இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மையான தேசபக்தர் - ரஷ்ய அமைச்சர் புகழாரம்.!
Russia foreign minister Sergey Lavrov
இன்று ரஷ்ய நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
"பாதுகாப்பு துறை, உணவு பாதுகாப்புகளில் ரஷ்யா தனது மேற்கத்திய நாடுகள் எவரையும் நம்ப முடியாது. ஐநா சபையின் சாசனத்தை மீறாத நாடுகளுடன் ஒத்துழைப்புதர நாங்கள் தயாராக உள்ளோம்.
இதில் இந்தியாவும் உள்ளது எங்களிடையே இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளது. இந்தியா தனது சொந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மையான தேசபக்தர். இந்தியா எங்களின் மிக பழமையான நண்பர்.
நீண்ட காலத்திற்கு முன்பாக இந்தியாவிற்கும் எங்களுக்கும் இடையே உள்ள உறவை திறன்வாய்ந்த கூட்டணி என்று அழைத்தோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்திய கருத்தை நாங்கள் ஆதரித்தோம்.
இந்தியாவுடன் எளிமையான வர்த்தகத்தை உள்ளுர் உற்பத்தியுடன் மாற்றியமைக்க தொடங்கினோம். மேலும் இந்தியாவிற்கு தேவையான பொருட்களின் உற்பத்தியை அந்த பிராந்தியத்தில் மாற்றி அமைத்தோம்.
இந்தியாவிற்கு தேவையான அனைத்து ஆதரவையும் ரஷ்யா வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்"
இவ்வாறு அந்த பேட்டியில் ரஷ்ய நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Russia foreign minister Sergey Lavrov