#BigBreaking || உக்ரைன்-ரஷ்ய போர் விவகாரத்தில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் வெளியான அந்த பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி பேச இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைனின் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் மேலும் இரு பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே, இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் டாக்டர் இகோர் பொலிகா தெரிவிக்கையில், "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும். இந்த விவகாரத்தில், இந்திய பிரதமர் மோடி அவர்கள், புடின் உடன் உரையாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். 

போர் வரலாற்றில் இந்தியா பலமுறை அமைதி காக்கும். ஆனால், இந்த போரை நிறுத்த உங்கள் வலுவான குரலை நாங்கள் வலியுறுத்திக்கிறோம்" என்று இந்தியாவுக்கான உக்ரைன் நாட்டின் தூதர் இகோர் பொலிகா தெரிவித்து இருந்தார். 

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று, இந்தியாவுக்கான தூதர் வலியுறுத்தி இருந்த நிலையில், இன்று இரவு ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

(குறிப்பு : இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இது தலைநகர் டெல்லி அரசியல் வட்டாரத்தில் இருந்து வந்த தகவல் மட்டுமே)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RussiaUkraineCrisis issue pm modi call to Russia pm


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->