உக்ரைனை சுத்துப்போட்ட ரஷ்யா., தாக்குதலில் அணு கதிர்வீச்சா? அதிரவைக்கும் தகவல்.! - Seithipunal
Seithipunal


செர்னோபில் அணுமின் நிலையத்தை தங்களது படைகள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.

இன்று இரண்டாவது நாளாக உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கிவ்-க்குள் முன்னேறி உள்ளது, இதன் காரணமாக, ​​கிவ்-ல் மீண்டும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது

சற்றுமுன் வெளியான தகவலின்படி, உக்ரைன் தலைநகர் கிவ்-ல் உள்ள அரசு அலுவலகங்கள் மீது ரஷ்யப்படை துப்பாக்கிச்சூடு நடத்திவருவதாக சொல்லப்பட்டுள்ளது. 

உக்ரைன் தலைநகர் கிவ்-ஐ முழுவதுமாக ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்து உள்ளதாகவும், கிவ் நகரின் மையப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செர்னோபில் அணுமின் நிலையத்தை தங்களது படைகள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அந்த அணுமின் நிலையத்தில் கடந்த 1986 ஆம் ஆண்டு கதிர்வீச்சு விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே, பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தரையிறங்கவோ அல்லது வான்வெளியைக் கடக்கவோ ரஷ்யா தடை விதித்துள்ளது. 

மேலும், பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கு வான்வெளியை ரஷ்யா மூடியுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RussiaUkraineWar issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->