ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் சார்பாக சஞ்சய் இளங்கோவன் போட்டி...?! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சியை போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்காத நிலையில் தேர்தல் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் குடும்பத்தினரே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என பரவலாக பேசப்படுகிறது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட வேண்டுமென தனது விருப்பத்தை தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் இன்னொரு மகன் சஞ்சய் இளங்கோவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்தான அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanjay Ilangovan contesting on behalf of Congress in Erode East


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->