அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டு முன்பு நடிகை கண்ணீருடன் போராட்டம் - நடிகை மீது கல்வீசி விரட்டி அடித்த சம்பவம்!
santhini manikandan issue
அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது, திரைப்பட துணை நடிகை சாந்தினி போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.
![](https://img.seithipunal.com/media/manikandan santhini.png)
அதில், 5 வருடங்களாக மணிகண்டனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தியதாகவும், 3 முறை கர்ப்பம் அடைந்து கலைத்துள்ளதாகவும், திருமணம்செய்து கொள்வதாகக் கூறிவிட்டு என்னை மணிகண்டன் ஏமாற்றிவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
![](https://img.seithipunal.com/media/santhini hsd.GIF)
இந்த புகாரை அடுத்து, மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு கைதுசெய்யப்பட்டு, பின்னர் நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமினில் வெளியே வந்தார்.
மேலும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சாந்தினி அளித்த புகாரை திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறியதால், மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
![](https://img.seithipunal.com/media/santhini hs.GIF)
இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டின் முன்பு அமர்ந்து, துணை நடிகை சாந்தினி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
![](https://img.seithipunal.com/media/santhini hjksdkjsd.GIF)
அப்போது மணிகண்டனின் உறவினர்கள் நடிகையை விரட்டி அனுப்பியதால் கண்ணீருடன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை சாந்தினி தெரிவிக்கையில், நான் அவர்கள் வீட்டு வாசலிலேயே பேசினேன். அவங்க என் மீது கல்லை விட்டு அடிக்கிறார்கள்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
English Summary
santhini manikandan issue