நிர்மலா சீதாராமனை பாராட்டிய காங்கிரஸ் முக்கிய தலைவர்!! - Seithipunal
Seithipunal


நாட்டின் முதல் முழுநேர மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதன் மூலம் வரலாற்றை மீண்டும் உருவாக்கியிருப்பதாகத் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி ஆசை தரூர் , கடந்த 1970 ஆம் ஆண்டு அப்போதைய முதல் பெண் நிதியமைச்சர் இந்திராகாந்தி பட்ஜெட்டை தாக்கல் செய்ததாகவும் அவருக்குப் பின் இரண்டவது பெண் நிதியமைச்சர் என்ற முறையில் நிர்மலா சீதாராமனை பாராட்டுவதாகவும் சசி தாரூர் தெரிவித்தார்.

மேலும், பேசிய சசிதரூர் பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் தமிழ் சங்க இலக்கியமான புறநானூற்று வரிகளை மேற்கோள் காட்டியதற்கு பாராட்டு தெரிவித்தார், நிலம் புகுந்த யானை எனத் தொடங்கும் புறநானூற்று வரிகளை மேற்கோள் காட்டியது, பாஜக அரசு யானை போல் மெதுவாக செயல்படுவதை ஒப்புக் கொண்டது போல இருந்ததாகத் தெரிவித்தார். மேலும் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல குறைகளைத் தெரிவித்த அவர் அதற்காக நிர்மலா சீதாராமனை மட்டுமே குறை சொல்ல முடியாது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasi tharoor wishes nirmala seetharam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->