நாத்திகம் பேசியவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.! எங்கு தெரியுமா?  - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில், நாத்திகத்தை ஊக்குவிக்கும் விதமாக பேசியதாக நபர் ஒருவருக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக வலைதளத்தில் நாத்திகத்தை ஊக்குவிக்கும் விதமாக ஏமன் நாட்டைச் சேர்ந்த அலி அபுலுகும் என்பவருக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டிருக்கும் அந்த தகவலின் அடிப்படையில், சவுதியில் உள்ள ஏமன் நாட்டை சேர்ந்த அலி அபுலுகும் என்ற நபர், தனது இரண்டு கணக்குகள் மூலம் மத நம்பிக்கையை விமர்சனம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரணை செய்த சவுதி நீதிமன்றம், அலி அபுலுகும் டிவிட்டர் பதிவுகள் சமய எதிர்ப்பு, சமய நம்பிக்கை இன்மை மற்றும் நாத்திகத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது என்று தெரிவித்தது.

இதனை அடுத்து அவரை குற்றவாளியாக அறிவித்த சவுதி நீதிமன்றம், அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது. இதனை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saudi arabia court order for Atheism


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->