தமிழ்நாட்டுக்குள் பிரதமர் மோடி காலை வைத்து விடுவாரா? பிரதமருக்கு இஸ்லாமிய கட்சி பிரமுகர் கொலை மிரட்டல்.!
SDPI MEMBER TWIT
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்காக, பிரதமர் மோடி சாலை வழியாக செல்லும் பொழுது போராட்டக்காரர்கள் திடீரென சாலையை மறித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று, பாஜக தொண்டர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்குள் பிரதமர் மோடி காலை வைத்து விடுவாரா? என்று பிரதமருக்கு இஸ்லாமிய கட்சி பிரமுகர் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SDPI கட்சியின் சிவகாசி மாநகர கிளை பொருளாளர் முஹம்மத் என்ற அந்த நபர், பாஜகவின் காயத்ரி ரகுராம் பதிவிட்ட டிவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில்,
"நல்லவேளை உயிருடன் விட்டார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்..
அடுத்த வாரம் தமிழ்நாட்டுக்குள் பிரதமர் மோடி காலை வைத்து விடுவாரா?" என்று கேள்வி குறியுடன் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடும் விதமாக பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரை தமிழக போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.