தாலி வாங்க முடியாத உனக்கு எதுக்கு கல்யாணம்? - புது விளக்கம் கொடுத்த சீமான்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவு செய்யப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும். இந்தத் தேர்தலை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தப் பிரச்சாரத்தின் போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்படி வழங்கப்படுகிறது என்பது குறித்து சீமான் புது விளக்கம் கொடுத்தார்.

அதாவது, எஸ்சி\எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை எடுத்து மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. தாலிக்கு தங்கம் திட்டம் கொடுத்தோம் என கூறுகிறார்கள். அரை சவரன் தாலி வாங்கிக் கூட பெண்ணுக்கு கட்ட முடியாதவனுக்கு எதற்கு திருமணம்? அந்த பெண்ணை எப்படி அவன் காப்பாறுவான்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman election campaighn in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->