தலையில் பூவை பார்த்து.. குழம்பிப்போன சீமான்.! மேடையில் அரங்கேறிய சுவாரசிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆண் குழந்தை ஒன்றுக்கு வெண்ணிலா என பெண் பெயரை சூட்டிய சம்பவம் காஞ்சிபுரத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு ஏற்பாடு செய்து வரும் நிலையில் அதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்டன மாநாடு ஒன்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். 

மேலும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் சோழவரம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த நாதக தம்பதி ஒன்று தங்கள் குழந்தையுடன் கலந்து கொண்டது. அப்போது தங்களது குழந்தையை சீமானிடம் காண்பித்து அதற்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.

குழந்தை ஜடை பின்னி பூ வைத்து இருந்ததை பார்த்து சீமான் அதை பெண் குழந்தை என்று நினைத்துக் கொண்டு வெண்ணிலா என்று பெயர் வைத்தார். அப்போது அந்த குழந்தையின் தந்தை சீமானின் காதில் அதை ஆண் குழந்தை என்று தெரிவித்தார். அதன் பின் சீமான் சிரித்துக்கொண்டே, "இதையெல்லாம் முதலிலேயே சொல்ல மாட்டீர்களா?" என்று கேட்டுக்கொண்டே அந்த குழந்தைக்கு 'வெற்றி வேந்தன்' என்று பெயர் வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman named boy baby to a Girly name


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->