சீமான், நிர்மலா சீதாராமன் சந்திப்பு!!!கூட்டணி இல்லை என்ற சீமானை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக விரும்புதா?
Seeman Nirmala Sitharaman meet BJP bring Seeman into alliance despite not having alliance
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகிற 2026 தமிழகச் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலில்,'சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நிர்மலா சீதாராமன் மற்றும் சீமான் சந்திப்பு நடந்துள்ளது. தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
கூட்டணி இல்லை எனத் தெரிவித்து வரும் சீமானைக் கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.க. விரும்புவதாகத் தெரிகிறது' எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.இதற்கு முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்து உரையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Seeman Nirmala Sitharaman meet BJP bring Seeman into alliance despite not having alliance