வாயை கொடுத்து சிக்கிய விசிக ஆளூர் ஷாநவாஸ்.! வச்சு செய்யும் தம்பிகள்.! சீமான் பங்குக்கு நறுக்குன்னு நாலு கேள்வி.!
SEEMAN SAY ABOUT ALOOR SHANAVAS
இன்று செய்தியாளர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிக்கையில், "காங்கிரஸ் எங்கள் இனத்தின் எதிரி. ஆனால் பாஜகவை மனிதகுலத்தின் எதிரியாக நாங்கள் கருதுகிறோம். அந்தக் கோட்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாகரீகம் பற்றிப் பேசுவதற்குத் திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது? முதலில் திமுகதான் நாகரிகத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் என்று கூறக்கூடாது என்று சொல்லும் தம்பி ஆளூர் ஷாநவாஸ், கடந்த காலங்களில் தமிழ்நாடு முதல்வரே அப்படிப் பேசியுள்ளதற்கான ஆதாரங்கள் வலையொளியில் இருக்கிறதே? அதற்குத் என்ன பதில்கூற போகிறார்?
பதவிக்கு வரும் முன்பு அப்பாவிகள், இப்பொழுது அவர்கள் குற்றவாளி ஆகி விட்டார்களா? அப்பா அஸ்லாம் பாஷா அவர்கள் இருபத்தி ஏழு ஆண்டுகள் விசாரணை கைதியாகத்தான் சிறையில் இருக்கிறார் என்பது உலகத்துக்கே தெரியும். இன்றைக்கு உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வென்றுவிட்டதால் தம்பி ஆளூர் ஷாநவாஸ் அதற்கான விசுவாசத்தைக் காட்டுகிறார்.
மோடியை எங்கள் விருந்தாளி என்று இன்றைக்கு திமுக கூறுகிறது. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கட்சிப் பொறுப்பை ஏற்கின்ற கூட்டத்தில் மோடி ஒரு பாசிஸ்ட் என்று பேசியுள்ளார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்று பேசுவார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேறொன்று பேசுவார்கள். இதுதான் திமுகவின் கடந்த கால வரலாறு. இன்று மோடிக்கு நாங்கள் எதிரி அல்ல, இந்துத்துவாவிற்குதான் நாங்கள் எதிரி என்று சொல்கிறார்கள்.
அதில் நாம் கவனிக்க வேண்டியது மோடிக்கும் இந்துத்துவாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்ல வருகிறார்களா? என்பதுதான். மோடி இந்துத்துவாவாதி இல்லை என்று கற்பிக்கின்ற போக்கை எப்படி ஏற்க முடியும்?
ஆர். எஸ். எஸ். காரர்கள் வந்துதான் அந்தக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டுமா? கேரளா, மேற்கு வங்கத்தில் அப்படித்தான் திறந்து வைக்கிறார்களா? ஆர். எஸ். எஸ். காரர்களை விருந்தாளி என்று கூறிவிட்டு, பிறகு எங்களை 'பிஜேபி பி டீம்' என்று கூறுவது திமுகவின் சந்தர்ப்பவாதம்.
ஒன்றியத்தில் அதிகாரத்தில் உள்ள பாஜகவை அனுசரித்துப் போக வேண்டும் என்று திமுக நினைக்கிறது. வலுவான தலைமை இல்லை என்பதால் முந்தைய அதிமுக அரசு அனுசரித்துச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது.
ஆனால் பெரும்பான்மையோடு திமுக ஆட்சியில் இருக்கும்போது எதற்கு அனுசரித்துச் செல்ல வேண்டும்? அதனால்தான் அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி, திமுக ஆட்சி கொத்தடிமை ஆட்சி என்கிறோம்" என்று சீமான் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
English Summary
SEEMAN SAY ABOUT ALOOR SHANAVAS