என் ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு பெருமைதான்! அடுத்து ஆங்கிலத்தில் வெளியாகும் - சீமான் அதிரடி!
Seeman Say About NTK Twitter account ban issue
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் சமூக வலைதள பக்கம், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரின் டிவிட்டர் பக்கங்கள் நேற்று முடக்கப்பட்டது.
மேலும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை போலீசாரும், திமுகவும் தான் இதற்க்கு காரணம் என்று, சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டினார்.
ஆனால், "நாம் தமிழர் சீமான், மே17 திருமுருகன் காந்தி ட்விட்டர் பக்கங்களை முடக்கப்பட்டது, கருத்துரிமைக்கு எதிரானது" என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை கண்டனம் தெரிவித்தார்.
இதன் மூலம் சீமான் டிவிட்டர் பக்கம் முடங்கியதற்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியானது.
இந்நிலையில், பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், "எதிர் கருத்தே சொல்லக்கூடாது என்பது ஜனநாயகம் ஆகுமா? மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வீதியில் போராடுவது, உலக அரங்கில் பெரிய அவமானம் இல்லையா?
இதற்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டதற்காக என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கினால், அது எனக்கு பெருமைதான். அந்த அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிடப் போகிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman Say About NTK Twitter account ban issue