விஜய் ஹசாரே கோப்பை; அபாரமாக ஆடி சதம் அடித்த ஜெகதீசன்; தமிழகம் 353 ரன்கள் குவிப்பு..!
agadeesan played brilliantly and scored a century
32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
இதில் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை, தமிழ்நாடு, பெங்கால் உள்பட பங்கேற்றுள்ள 38 அணிகள் 05 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் மற்றும் 02-வது இடத்தை பிடிக்கும் சிறந்த ஒரு அணி என 06 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். எஞ்சிய இரு அணிகள் பிளே-ஆப் சுற்று மூலம் தேர்வாகும்.
இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தமிழகம் - ஜம்மு காஷ்மீர் அணிகள் ஆடின.
போட்டியில் டாசில் வென்ற ஜம்மு காஷ்மீர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் களம் இறங்கினர்.
இதில் துஷார் ரஹேஜா 07 ரங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 07 ரன்னிலும் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாபா இந்திரஜித் களம் இறங்கினார்.
ஜெகதீசன் - இந்திரஜித் இணை நிதானமாக ஆடி ரன்கள் குவித்தது. குறித்த ஆட்டத்தில் இருவரும் அரைசதம் அடித்தனர். இதில் இந்திரஜித் 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விஜய் சங்கர் 25 ரன்கள் மாத்திரம் அடித்தார். முகமது அலி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜெகதீசன் சதம் அடித்த நிலையில் 165 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் தமிழகம் 50 ஓவர்களில் 06 விக்கெட்டை இழந்து 353 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 354 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஷ்மீர் ஆட உள்ளது.
English Summary
agadeesan played brilliantly and scored a century