தளபதி விஜய்காக ஓடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்;படம்பிடிப்பு தளத்தில் சுவாரஸ்ய சம்பவம்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்று மக்கள் விரும்பப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இதுவரை காலமும் தமிழ் சினிமாவில் ரஜினியின் இடத்தை எந்த நடிகராலும் எந்த நடிகராலும்  பிடிக்கமுடியவில்லை.

இந்திய சினிமாவே பெருமையாக கொண்டாடப்படும் நம்ம சூப்பர் ஸ்டார் இன்றும்  இளம் நடிகர்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாபா பட ஷூட்டிங் நடைபெறும் போது விஜய்யை பார்க்க ஓடோடி சென்றுள்ளார். பொதுவாக நடிகர்கள் இருவரின் படப்பிடிப்பு தளம் அருகில் இருந்தால் இரண்டு நட்சத்திரங்களும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது சினிமாவை பொதுவரை சாதாரணமாக நடக்கும் நிகழ்வு.



அந்த வகையில், ரஜினிகாந்தின் பாபா பட ஷூட்டிங் மற்றும் விஜய்யின் பகவதி ஆகிய படங்கள் படப்பிடிப்பு அருகில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, விஜய் ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்று வெங்கடேஷிடம் கேட்டுள்ளார். இயக்குனர்  அதற்கு அப்போது எடுக்கப்பட்ட ஷாட் முடிந்த பின் செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென ரஜினிகாந்த் விஜய்யை பார்க்க பகவதி பட ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வந்துள்ளார்.

பொதுவாகவே முன்னணி  நடிகர்களுக்கு இடையே போட்டி, சண்டை இருக்கும். அது போன்று எந்த எண்ணமும் இல்லாமல் அப்போது விஜயை ரஜினி அவர்கள் பார்க்க வந்தது வியப்பாக இருந்ததாகவும், அவர்கள் அப்படி இருப்பதால் தான் புகழின் உச்சத்தில் இருக்கின்றனர் என இயக்குனர் வெங்கடேஷ் மேலும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

interesting incident on the vijay movie shooting spot


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->