கோட் போட்ட எடப்பாடியை கொண்டாடிய சீமான்.! கிளுகிளுப்பாக கூறிய வார்த்தை.!
SEEMAN SAYS ABOUT EDAPPADI COAT
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்கள் மன்றத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "ஐநா மன்றத்தில் இலங்கை படுகொலை குறித்து பேசுவதை விட, இந்திய நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய தேவை இருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தோம் என வார்த்தைக்கு வார்த்தை கூறுகின்றனர். வீட்டை இடித்தது யார் என அவர்கள் கூறாதது ஏன்? விஜய் கட்சி ஆரம்பித்தால் நான் வரவேற்பேன். யார் யாரோ காட்சி ஆரம்பிக்கின்றனர். அந்த வகையில் விஜய் ஆரம்பித்தால் என்ன.?
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடுத்திய உடை ஆடை குரித்து சமூகவலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர். ஆடை என்பது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையாகும். சூழ்நிலையை பொறுத்து அதனை மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
சமூக வலைதளங்களில் வேலை வெட்டி இல்லாமல் கிண்டல் செய்வது எல்லாம் மனநோயாளிகளின் வேலை. ஆயிரம்தான் இருந்தாலும் எனது மண்ணின் மைந்தரான முதல்வரை என்னால் விட்டுக்கொடுக்க இயலாது." என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
SEEMAN SAYS ABOUT EDAPPADI COAT