பைபிள், குர்ஆன் போல மனு தர்மம் புனித நூல் அல்ல!! அமைச்சர் சேகர்பாபு தரப்பு வாதம்!! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற சனாதான தர்ம ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது கோவாரண்டோ வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமைச்சர் உதயநிதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் இந்த வழக்கில் சட்டமன்ற சிறப்பு செயலாளரை சேர்ப்பதற்கு பதில் சட்டமன்ற செயலாளர் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை சமர்ப்பிக்க தனியார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனலுக்கு உத்தரவிட கோரிய மனு மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

மேலும் சரியான எதிர் மனுதாரர் சேர்க்காமல் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி இந்து மாதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு கோவில்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் உள்நோக்கம் கொண்டு அமைச்சர் சேகர்பாபு மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமாதான ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து மதம் என்பது ஒன்றுதான் எனக் கூறுவதை முடியாது. பரந்து விரிந்த இந்து மதத்தை, சனாதனம் என்ற சிறிய வட்டத்திற்குள் சுருக்க முடியாது. இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால், ஒருபோதும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்க முடியாது.

மனு தர்மத்தை அடிப்படையாக கொண்டுள்ள சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியதில் எந்த தவறும் இல்லை. மனு தர்மத்திற்கு எதிராக பேசியது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக அமையும்? சனாதனத்தை விரட்டினால் மட்டுமே இந்து மதத்தை மக்கள் ஏற்பார்கள் என சேகர்பாபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். 

மேலும் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியது எந்த விதத்திலும் தவறு இல்லை எனவும், ஆரியர்களின் சட்டம் ஆரியர்களுக்கு மட்டுமே பொருந்தும், தமிழர்களுக்கு அல்ல. தமிழர்களும் ஆரியர்களும் வெவ்வேறு. சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். பைபிள், குர்ஆன் போல மனு தர்மம் புனித நூல் அல்ல" என நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து வாதங்கள் முடிவடையாததால் திமுக எம்.பி ஆ.ராசாவின் தரப்பு வாதத்திற்காக வழக்கில் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SekarBabu argue Manu Dharma is not a holy book like Bible Quran


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->