செந்தில் பாலாஜி வழக்கு.!! 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்.!!
Senthil Balaji case 3000 page charge sheet filed in Chennai Court
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை இன்று (ஆகஸ்ட் 12) வரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து அன்று இரவே அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது. கடந்த 4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 9 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரிக்க அமலக்கத்துறைக்கு வழங்கப்பட்ட காவல் ஆவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவானது கூடிய விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Senthil Balaji case 3000 page charge sheet filed in Chennai Court