அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பான புகாரில் மதுவிலக்கு செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் படி காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு துறை கூடுதலாக அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் பரிந்துரை செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி  "செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஆளுநர் கோரியதாகவும் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை பிற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கும் அரசின் பரிந்துரையையும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்துவிட்டார்" என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து "அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வைத்த துறைகளான மின்துறை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது எனவும் செந்தில் பாலாஜி, குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டு, நீதிமன்றக் காவலில் இருப்பதால், அமைச்சராக தொடர்வதற்கு ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை" ஆளுநர் மாளிகை அறிவித்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி "அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத (Minister without portfolio) அமைச்சராகத் தொடரவும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது" என அரசாணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji continue as Minister of TNGovt has issued an order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->