அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்; செய்தியாளர் சந்திப்பில் 'தக் லைஃப்' செய்த செந்தில் பாலாஜி..! - Seithipunal
Seithipunal


திமுக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனக்கு தானே சாட்டையடி கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தழிழ்நாட்டில்   சட்டம், பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து தனக்கு தானே சாட்டையடி போராட்டத்தில் அண்ணாமலை ஈடுபட்டார்.

இது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம்   எழுப்பிய கேள்விக்கு அவர்  சிரித்தபடியே பதில் கூறியுள்ளார். அதாவது இன்னைக்கு சன்-டே வேலை இருக்கா இல்லையா? என்று நக்கலாக நிருபரை பார்த்து கேட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். 

இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் அமைக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, அந்தப் பகுதி மக்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்தார்.

அப்போது அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அங்கு அவர் பேசுகையில்;  "கோவை மாநகராட்சி பகுதியில் மட்டுமே இன்று ரூ.30.93 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை புதிய தார் சாலைகள் அமைப்பதற்காக 860 கி.மீ சாலைகளுக்கு ரூ.415 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலைகள் அமைப்பதற்காக கூடுதலாக ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.100 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அத்துடன், மீதமுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சாலை பணிகளுக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சி வரலாற்றில் சாலைகள் பணிகளுக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  திமுகவின் மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அவிநாசி சாலை மேம்பாலம் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. 
அதேநேரத்தில் அந்தப் பகுதி தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அவிநாசி சாலை மேம்பாலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் பாலம் நீட்டிப்பு பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji mocked Annamalai whipping protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->