சென்னை: 15 வயது சிறுவனுடன் காதல்! 22 வயது இளம்பெண் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் 15 வயது சிறுவனை காதலித்து, கடத்தி சென்ற இளம் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(18 வயதுக்குட்ட சிறார்கள் குறித்த வழக்குகளில் அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட அடையாளங்கள் மறைக்கப்பட வேண்டும் என்பதால், இந்த செய்தியில் சிறுவனின் ஊர் மற்றும் பெயர் மறைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது)

சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் சில தினங்களுக்கு முன்பு மாயமானதாக அவரின் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், மாயமான அந்த சிறுவன் பாண்டிச்சேரியில் இளம்பெண் ஒருவருடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட இளம் பெண், சிறுவன் ட்யூஷன் பயின்ற ஆசிரியையின் தங்கை என்பது தெரியவந்துள்ளத.

மேலும் 22 வயது உள்ள அந்த இளம் பெண், 15 வயது சிறுவனை காதலித்து அவரை கடத்தி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதால், இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai minor boy young woiman love and kidnaped case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->