விஜய்யின் அரசியல் வருகை குறித்து இப்படி பேசிய வைகோ?
vaiko new year press meet
”பா.ஜ.க வினால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கே ஆபத்து. நான் இருக்கும் வரை தி.மு.க ஆட்சியை அகற்ற விட மாட்டேன்” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: “ தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக மண்டல பாசறை கூட்டங்கள் விரைவில் நடத்த இருக்கிறோம். தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது. பா.ஜ.க வினால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கே ஆபத்து. நான் இருக்கும் வரை தி.மு.க ஆட்சியை அகற்ற விட மாட்டேன். முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு பணியாற்றுகிறார். அனைத்து தரப்பினர் பயன்பெறும் வகையில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்திற்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யவில்லை. மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மாநில அரசுகளை நசுக்கி வருகிறது.
அமெரிக்காவைப்போல தான் அதிபராக வேண்டும் என்று மோடி விரும்புகிறார். மூன்று அல்லது 4 மாதங்களில் நாடாளுமன்றம் கழிந்துவிட்டால் மீண்டும் நாடு முழுவதும் ஒரே தேர்தலை நடத்துவார்களா? அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். விஜய்யின் அரசியல் வருகையால் தி.மு.க கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று பேசினார்.
English Summary
vaiko new year press meet