திண்டுக்கல்: ஜாதி பெயர் சொல்லி திட்டிய ஆசிரியர்! தற்கொலை செய்துகொண்ட மாணவன்! நடவடிக்கை எடுக்காத காவல்துறை!
pazhani school student death case
ஜாதி பெயர் சொல்லி ஆசிரியர் திட்டியதால், மனம் உடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்று, உயிரிழந்த மாணவனின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நெய்க்காரப்பட்டியில் ரேணுகாதேவி பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் பயின்று வந்த மாணவனை சாதி ரீதியில் திட்டியதால், கடந்த மாதம் இந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து புகார் அளிக்கப்படும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, மாணவனின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "எனது மனம் ரேணுகாதேவி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
எனது மகனுக்கு கணக்கு பாடம் எடுத்த சரவண பெருமாள் என்ற ஆசிரியர், என் மகனை சாதி ரீதியாக கேவலமாக பேசி, அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
மேலும் வரும்போதும் போகும்போதும் எனது மகனை அடித்து துன்புறுத்தியதால், எனது மகன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டான். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று தாய் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.
English Summary
pazhani school student death case