ரஃபேல் வாட்ச் பில் குறித்து பரபரப்பு ட்விட்.. உண்மையா..? கேள்வி கேட்கும் செந்தில் பாலாஜி..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் ரஃபேல் கடிகாரம் குறித்து கேள்வி எழுப்பதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே பெரும் வார்த்தை முதல் ஏற்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல்-14) ரஃபேல் வாட்ச் பில் மற்றும் திமுக தலைவர்களின் குடும்பம் மற்றும் அமைச்சர்கள் குறித்தான ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முதல் ட்விட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் குறித்தான தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அந்த ட்விட்டர் பதிவில் "அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில்லு கிடைச்சிருச்சி! பில்லுக்குப் பின்னிருப்பதோ தமிழகம் கர்நாடகா என இரண்டு மாநிலங்களில் நடைபெறும் பரபர ஊழல் வரலாறு.

(கொஞ்சம் நீளமான பதிவு அவசியம் படிக்கவும் அனைத்து குழுக்களிலும் பகிரவும்) பாஜக தலைவரோ இல்ல வேற யாரோ 5 , 10 லட்சத்துக்கோ அதுக்கு மேலயோ வாட்ச் வாங்குவதில் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. ஆனா ரெண்டு ஆடு வச்சிருக்க ஏழை விவசாயி என்று வேஷம் போட்டு 4 லட்சம் ரூவாய்க்கு வாட்ச் வாங்கி அதுக்கு கணக்கு காட்ட முடியாம கதை சொல்லிகிட்டு இருப்பது தான் வெட்ககேடுஉண்மையை சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை தேசப்பற்றுடன் (!?) கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் அவரோட சொந்த பணத்தில் வாங்கிய வாட்சே இல்லை. அது போலீஸில் வேலை பார்த்த காலத்தில் லஞ்சமாக பெற்றுக்கொண்ட திருட்டு வாட்ச்.

அந்த வாட்ச் உண்மையிலேயே SARVALOKA SERVICES-ON-CALL PRIVATE LIMITED அப்படின்ற பெங்களூர் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது! இந்த நிறுவனம் 2014ல் துவங்கப்பட்ட வீட்டு கட்டுமானம் மற்றும் ரிப்பேர் பணிகள் செய்யும் ஆன்லைன் நிறுவனம்.இந்த நிறுவனம் பின்னாளில் விரிவாக்கம் மற்றும் நிர்வாக மாறுதல்கள் செய்யப்பட்டு HOUSEJOY என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது. ரூ.136 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டக்கூடிய இந்த நிறுவனத்தின் COOவாக அப்போது நியமிக்கப்பட்டவர் தான் 420 ஆசாமியான சஞ்சித் கவுரவ் (Sanchit Gaurav)

இந்த சஞ்சித் கவுரவின் உள்ளடி வேலைகளால் இந்த நிறுவனத்தை துவக்கிய அர்ஜுன் குமார் மற்றும் சுனில் கோயல் ஆகியோர் அந்த நிறுவனத்தை விட்டே நிர்வாக குழுவால் வெளியேற்றப்பட்டனர் என்பது உள்ளிருந்து வரும் செய்தி!

உள்ளடி அரசியல், நிறுவனத்தின் தரமற்ற சர்வீஸ்களால் கடுப்பானவர்கள் நிறுவனத்தின் மீது புகாரளித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் COO சஞ்சித் கவுரவ் பொருளாதார குற்றவாளியாக பெங்களூர் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் ( indiankanoon.org/doc/9163051/ )இந்த நிலையில் தான் அப்போதைய கர்நாடக (அ)சிங்கம், அண்ணாமலை அக்டோபர் 2018 பெங்களூர் தெற்கு DCP- ஆக நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில் HOUSEJOY நிறுவனத்தின் பெயரில் பல மோசடி புகார்கள் வரத்தொடங்கின. பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தின் முன் போராட்டங்களும் நடத்தினர்.DCP அண்ணாமலையின் காவல் எல்லைக்குள் தான் இது எல்லாமே நடக்குது. மீடியாக்களில் வெளியாகும் செய்திகளையும், பாதிக்கப்பட்டவர்கள் தரும் புகார்களையும் மழுங்கடிக்க நம்ம கிரிமினல் CEO அப்போதைய கர்நாடக ABVP பொறுப்பாளர், தற்போதைய அதே பெங்களூர் MPயான ‘தேஜஸ்வி சூர்யா’வை அணுகுகிறார்.

இவ்வாறு நெருங்கிய நண்பர்களான தேஜஸ்வியும் சஞ்சித்தும் சஞ்சித்தின் HOUSEJOY நிறுவனத்திற்கு எதிராக கொடுக்கப்படும் புகார்களை கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காகவே தேஜஸ்வி சூர்யா மூலம் அப்போதைய DCP அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட வாட்ச் தான் இந்த ‘ரபேல் வாட்ச் BR03-94’! இதுல இன்னொரு விசயம் என்னன்னா தேஜஸ்வி சூர்யாவும் இதே வாட்சை கட்டிக் கொண்டிருந்தவர் தான்! மோசடி பேர்வழியிடம் லஞ்சமாக பெற்ற வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டுதான் அண்ணாமலை எல்லோருக்கும் தேசபக்தி பாடம் எடுக்கிறார்" என பதிவிடப்பட்டிருந்தது. நேற்று முதல் இந்த லிட்டர் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை ரீட்டைச் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி உண்மையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji questions annamalai Rafael watch bill is true


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->