ஆடு விற்று சேர்த்த 5 லட்சம் ரூபாய்..!! கடிகாரம் வாங்கிய ரசீது வருமா..?!! அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து இணையத்தில் ஒரு பதிவு வைரலானது. அதில் தான் ஏழை விவசாயி என சொல்லும் அண்ணாமலை 2.48 லட்சம் ரூபாய்க்கு கடிகாரத்தை அணிந்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது. அண்ணாமலை அணிந்திருந்த வாட்ச் மற்றும் அது குறித்தான தகவல் அடங்கிய பதிவு இணையத்தில் வைரலானது. 

இதுகுறித்து பேசிய அண்ணாமலை "இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்தது அனைவருக்கும் தெரியும். அப்பொழுது அந்த ரஃபேல் விமானம் பாகங்கள் வைத்து 500 வாட்ச்சுகளை மட்டுமே செய்தனர். எனக்கு ரபேல் விமானம் ஓட்டும் பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால் ப்ரொபைல் விமானத்திற்கு இணையாக இருக்கும் இந்த வாட்ச்சை வாங்கி கட்டியுள்ளேன். எனது உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் எனது கையில் இருக்கும். ரபேல் நிறுவனத்தின் வாட்ச்சுகளை இந்தியன் தான் வாங்குவான்" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் வாட்சை, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல எக்ஸெல் ஷீட்டில் ஏமாத்து வேலை தான் வருமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji asks Annamalai has the receipt for the Raffle watch


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->