இந்து, இந்துத்துவா வித்தியாசம் உண்டு.! - சித்தராமையா பேச்சால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சி பேசிய சித்தராமையா "தேர்தலில் வெற்றி பெற மிதமான இந்துத்துவாவை கடைப்பிடிப்பது ஒரு வியூகமாக இருக்க வேண்டும். இந்து வாக்காளர்களின் வாக்குகளையும் பெற முடியும். சிறுபான்மையினரின் வாக்குகளையும் இழக்க நேரிடாது என்பதாக ஒரு கருத்து உள்ளது. இந்துத்துவாவுக்கும் இந்து நம்பிக்கைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நான் ஓர் இந்து. நாம் ராமரை வழிபடுவதில்லையா? பாஜகவினர் மட்டும்தான் ராமரை வழிபடுகிறார்களா? ராமர் கோயில்களை நாம் கட்டுவதில்லையா? ராம பஜனைகளை நாம் மேற்கொள்வதில்லையா? டிசம்பர் மாதத்தில் மக்கள் பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். எங்கள் கிராமத்தில் நடைபெறும் பஜனைகளில் நான் சிறு வயதில் கலந்து கொண்டுள்ளேன். பாஜகவினர் மட்டும்தான் இந்துக்களா? நம் இல்லையா?" என பேசியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா இருந்த போது "அரசியல் சாசனத்துக்கு எதிரானது இந்துத்துவா. இந்துத்துவா அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்துத்துவா வேறு; இந்து தர்மம் வேறு. நான் இந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல. எந்த மதமும் கொலையை ஆதரிப்பதில்லை. ஆனால், இந்துத்துவா கொலையையும், பாகுபாட்டையும் ஆதரிக்கிறது" பேசி இருந்தார் என்பது குறிப்பிட தாக்கத்து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah said There is difference between Hindu and Hindutva


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->