#சிவகாசி || செய்தி சேகரிக்க சென்ற பிரபல செய்தியாளரை அடிக்காத குறையாக விரட்டியடித்த பொதுமக்கள்.!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அந்த பகுதியை சேர்ந்த பலர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்ட போது, வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மீதம் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெடி விபத்து சம்பத்தை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற, தமிழகத்தின் பிரபல செய்தி ஊடகம் ஒன்றின் ஒளிப்பதிவாளர் செய்தியாளரை செய்தி சேகரிக்க விடாமல், அந்த ஆலையை சேர்ந்த நபர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டி அனுப்பி உள்ளனர்.

மேலும் வீடியோ எடுக்க முயன்ற கேமரா மீதும் அங்கிருந்த மக்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த பிரபல செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்தை விட்டு தப்பித்து வந்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது பொதுமக்களும், பட்டாசு ஆலையை சேர்ந்தவர்களும் தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakasi fire accident issue reporter attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->