இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எரி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அவற்றின் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டுமென தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

இன்று தலைநகர் கொழும்புவில் போராட்டத்தின் போது வன்முறை சம்பவம் அரங்கேறியது. இதனையடுத்து  கொழும்புவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்து இருந்தது.

இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அந்நாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

மேலும், தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு மகிந்த ராஜபக்ச அனுப்பியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka EconomicCrisis Rajapaksa resign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->