உத்தர பிரதேசத்தில் கோர விபத்து!...புதுமண தம்பதி உள்பட 7 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் மணமக்கள் சென்ற வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மணமக்கள் ஜார்கண்டில் நேற்று திருமணம் செய்து உள்ளனர். பின்னர் மணமக்கள் இருவரும் தங்கள் உறவினர்களுடன் உத்தர பிரதேச மாநிலம், பிஜ்னோர் நகரில் உள்ள தம்பூர் பகுதியில் உள்ள மணமகனின் வீட்டிற்கு வாகனம் ஒன்றில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

மணமக்கள் சென்ற இந்த வாகனத்தில் மணமகள், மணமகன், அவருடைய சகோதரர் மற்றும் அத்தை என 11 பேர் வரை இருந்தனர். தொடர்ந்து இவர்கள் சென்ற எதிரே வந்த டெம்போ மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில், 2 வாகனங்களும் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில், மணமகள், மணமகன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் இருவர் உயிரிழந்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident in uttar pradesh 7 people including a newly married couple died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->