"அகில இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முதல்வர் ஸ்டாலின்"- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பாராட்டு ! - Seithipunal
Seithipunal


உதகையில் நடைபெற்ற திமுக உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டத்தில்  கலந்து கொண்டு பேசிய திமுக வின்  பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சர்ருமான துரைமுருகன்  முதல்வர் ஸ்டாலின் காமராஜருக்கு நிகரானவர் என பாராட்டியிருக்கிறார்.

திமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம்  உதகையில் ஏ டி சி  பஸ் நிலையம் அருகே வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அந்தக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் "கலைஞர் கருணாநிதி அவர்கள் அரசியலுக்கு வந்து  சில ஆண்டுகள் கழித்து தான் அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின்  பதவியேற்று இரண்டு ஆண்டுகளிலேயே  இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அகில இந்தியாவும் திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்" என பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் "முதல்வர், பேசுவதை விட  அதிகமாக செயல்களில் தன்னுடைய ஆளுமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவர் நம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரை போன்றவர் என பாராட்டினார்". மேலும் இந்திய அரசியல் தொடர்பாக  தினமும் முதல்வரை தொடர்பு கொண்டு கருத்து கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin is equal to ex chief minister and king maker kamaraj dmk secretary duraimurugan heaps praise


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->