பாஜகவுக்கு எதிராக ஒன்று சேரும் எதிர்கட்சிகள்! காங்கிரஸ் அல்லாதவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஏற்பாடு!
State party leader preparing to meet Sonia Gandhi
சோனியாவை சந்திக்க தயாராகும் மாநில கட்சி தலைவர்!
பீகாரில் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து மெகா கூட்டணியில் 161 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது.
பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியிலிருந்து நாடு முழுவதும் எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அல்லது மூன்றாவது அணி அமைப்பது என பலதரப்பட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பீகாரில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஜனதா தள நிர்வாக கூட்டத்தில் பேசிய லல்லு பிரசாத் யாதவ் "2024ம் ஆண்டு தேர்வு பொதுத் தேர்தலில் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்குவோம். ராகுல் காந்தி தனது யாத்திரையை முடித்த பிறகு நிதிஷ் குமார் உடன் இணைந்து டெல்லியில் சோனியா காந்தியையும் ராகுலையும் சந்திக்க இருக்கிறேன்" என பேசியுள்ளார்.
இதனால் பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் செயல்பட தொடங்கி விட்டன என்பது தெரிய வருகிறது. மாநில உரிமை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேற காரணமாக இருந்த சமூகநீதி பிரச்சனை வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என பரவலாக பேசப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை மையமாகக் கொண்டு அரசியல் வியூகம் வகுப்பார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளின் பொதுப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் சோனியா காந்தியுடான சந்திப்பு இருக்கும் என லல்லு பிரசாத் தெரிவித்து இருப்பது அரசியல் அரங்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
English Summary
State party leader preparing to meet Sonia Gandhi